
பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் தொகுப்பு ஒன்றை ட்வீட் செய்துள்ளார்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இரண்டு புகைப்பட தொகுப்பினை வெளியிட்டு, “அன்பான அடல் ஜிக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கான அவரது சிறந்த சேவையையும் முயற்சிகளையும் இந்தியா எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.” என டிவிட் செய்துள்ளார்.
வாஜ்பாயின் நீண்டகால அரசியல் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த தொகுப்பு கொண்டுள்ளது.
“இந்த நாடு அடல் ஜியின் தியாகத்தை ஒருபோதும் மறக்காது. அவரது தலைமையின் கீழ் இந்தியா ஒரு அணுசக்தி நாடாக உயர்ந்தது. ஒரு அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் அல்லது பிரதமர் என அடல் ஜி பல பொறுப்புகளில் சிறப்பக செயல்பட்டுள்ளார். அடல் ஜியின் வாழ்க்கையைப் பற்றி பல பெரிய விஷயங்களைச் சொல்ல முடியும். அவரது உரைகள் பற்றிப் பிரபலமாக பேசப்படுகின்றன. எதிர்காலத்தில் சில நிபுணர்கள் அவரது உரைகளை ஆராய்ந்தால், அவரது மௌனமும் அதன் வலிமையும் அவரது உரைகளை விட பல மடங்கு வலிமையானது என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.” என பிரதமர் வாஜ்பாயின் பெருமையை குறிப்பிட்டுள்ளார்.
Tributes to beloved Atal Ji on his Punya Tithi. India will always remember his outstanding service and efforts towards our nation's progress. pic.twitter.com/ZF0H3vEPVd
— Narendra Modi (@narendramodi) August 16, 2020
தொகுப்பின் சில புகைப்படங்களில் மோடி வாஜ்பாயிடம் ஆசீர்வாதம் பெறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முன்னாள் பிரதமரின் நினைவாக “பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி தேசபக்தி மற்றும் இந்திய கலாச்சாரத்தின் குரலாக இருந்தார். அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள அரசியல்வாதி மற்றும் திறமையான அமைப்பாளராக இருந்தார், அவர் பாஜகவின் அடித்தளத்திலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தார் மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை நாட்டுக்கு சேவை செய்ய ஊக்கப்படுத்தினார்.” என டிவிட் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்த மற்றொரு பழைய புகைப்படம்
டிசம்பர் 25, 1924 அன்று மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிறந்த வாஜ்பாய் பாஜகவில் இருந்து பிரதமராக பதவியேற்ற முதல் நபர் ஆவார். அவர் மூன்று முறை பிரதமராக பணியாற்றினார். அரசியலைத் தவிர, வாஜ்பாய் ஒரு முக்கிய எழுத்தாளர் மற்றும் பல கவிதைகளை எழுதினார்.
அவர் ஆகஸ்ட் 16, 2018 அன்று காலமானார். வாஜ்பாயின் நினைவாக டிசம்பர் 25 "நல்லாட்சி தினமாக" கொண்டாடப்படுகிறது.