This Article is From Dec 09, 2019

டெல்லி தீ விபத்தில் 11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்!!: 'ரியல் ஹீரோ' என மக்கள் பாராட்டு!

டெல்லியில் இன்று காலை 5.22-க்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள் ஆவர். தூங்கிக் கொண்டிருக்கும்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

டெல்லி தீ விபத்தில் 11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்!!: 'ரியல் ஹீரோ' என மக்கள் பாராட்டு!

தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லாவை நேரில் சந்தித்து பாராட்டும் அமைச்சர் சத்யேந்திர ஜெயின்.

New Delhi:

டெல்லியில் இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களில் 11 பேரை தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா மீட்டுள்ளார். அவரை ரியல் ஹீரோ என்று பொதுமக்கள் பாட்டியுள்ளனர். 

வடக்கு டெல்லியின் ஆனஜ் மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, வீரர் ராஜேஷ் சுக்லாதான் முதலில் உள்ளே நுழைந்தார். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அவர் 11 பேரை பத்திரமாக மீட்டார். 

இந்த மீட்பு நடவடிக்கையின்போது அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. இதேபோன்று, மயங்கிய நிலையில் பல தொழிலாளர்களை தீயணைப்பு படையினர் மீட்டு பேப்பர் தொழிற்சாலையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். 

காயம் அடைந்த தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை டெல்லியின் உள்துறை அமைச்சர் சத்யேந்திரா ஜெயின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், 'தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லாதான் ரியல் ஹீரோ. அவர்தான் தீ விபத்து ஏற்பட்டபோது முதலில் தொழிற்சாலைக்குள் நுழைந்து 11 உயிர்களை காப்பாற்றினார். மீட்பு நடவடிக்கையின்போது அவரது எலும்பில் பாதிப்பு ஏற்பட்டபோதிலும் கடைசி வரை களத்தில் நின்று ராஜேஷ் பணியாற்றினார். வீரமான ஹீரோவுக்கு வீர வணக்கம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

டெல்லியில் இன்று காலை 5.22-க்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள் ஆவர். தூங்கிக் கொண்டிருக்கும்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தவிடப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பாக தொழிற்சாலையின் 2 உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். 
 
.