This Article is From Jun 11, 2020

காணொளி காட்சியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய அமித் ஷா! - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காணொளி காட்சி பிரச்சாரத்திற்காக மாநிலம் முழுவதும் சுமார் 70,000 பிளாட் டிவிகளும், 15,000 பெரும் எல்இடி டிவிகளையும் பாஜக அமைத்துள்ளது. அந்த மாநிலத்தில் 78,000 வாக்குச் சாவடிகள் உள்ளன. 

காணொளி காட்சியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய அமித் ஷா! - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

காணொளி காட்சியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய அமித் ஷா! - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

New Delhi:

மேற்கு வங்கத்தில் உள்ள ஒர் கிராமத்தில் மூங்கில் மரத்தில் எல்இடி டிவி வைக்கப்பட்டிருப்பதும், கிராம மக்கள் அதனை சுற்றி அமர்ந்திருப்பதும் போல் உள்ள அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி கடும் புயலை கிளப்பியுள்ளது. மேற்குவங்கத்தில் ஏற்பட்ட ஆம்பன் புயல் பேரழிவிலிருந்து மீள மாநிலத்தின் பெரும்பகுதிகள் போராடி வருகிறது. ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரஸ் நெருக்கடியில் உள்ளது. இந்த நேரத்தில், இப்படி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியதே சர்ச்சை ஏற்பட முக்கிய காரணம். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காணொளி காட்சி பிரச்சாரத்திற்காக மாநிலம் முழுவதும் சுமார் 70,000 பிளாட் டிவிகளும், 15,000 பெரும் எல்இடி டிவிகளையும் பாஜக அமைத்துள்ளது. அந்த மாநிலத்தில் 78,000 வாக்குச் சாவடிகள் உள்ளன. 

இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தொலைக்காட்சி பெட்டிகளில் ஒன்றில் அமித் ஷாவின் பேச்சை கிராமவாசிகள் பார்ப்பது போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்ட இடைவிடாத முயற்சியின் அடையாளம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் அந்தப் புகைப்படம் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் ராகேஷ் சச்சன், கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏழை மற்றும் தொழிலாளர்களுக்கு பாஜகவால் ரூ.7,500 வழங்க முடியாது. அவர்களுக்கு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய முடியாது. ஆனால், அதன் தேர்தல் பிரச்சாரத்தை ஊக்குவிக்க மட்டும் அனைவரும் வெளியே செல்கின்றனர் என்று கட்டணமையாக சாடினார். 

இதனிடையே, இந்த புகைப்படத்தை பகிர்ந்த ஆம் ஆத்மி கட்சி அந்த புகைப்படத்திற்கான ஒரு தலைப்புப் போட்டியை நடத்தியது. அதில், பாஜக , "வென்டிலேட்டர்களுக்குப் பதிலாக எல்.இ.டி டிவிக்கள். நாடு உண்மையில் மாறிக்கொண்டிருக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பல ட்விட்டர் பயனாளர்கள் இந்த புகைப்படத்தில் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். 

மேற்கு வங்கத்தில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனைப் பார்த்ததால், அமித் ஷாவின் காணொளி காட்சி பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாக நேற்று முன்தினம் பாஜக கூறியிருந்தத்து. இதனை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதாக விமர்சித்தது. 
   
.