This Article is From Jul 19, 2018

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு: அதிமுக யார் பக்கம்..?

மத்தியில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் நடக்க உள்ளது

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு: அதிமுக யார் பக்கம்..?
New Delhi:

மத்தியில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில், தமிழக ஆளுங்கட்சியான அதிமுக, நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக-வுக்கு துணைபோகும் என்று டெல்லி அரசியல் வட்டாரம் தகவல் கூறுகின்றது.

கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போது தான் ஏற்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. 

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாஜக-வுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதற்கு தனியாக 273 சீட்கள் இருக்கின்றன. இது பாதியளவை விட மிக அதிகம். ஆனால், பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் எடுக்கப்பட உள்ளது.

அதே நேரத்தில் நேற்று பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி, ‘எங்களிடம் போதுமான வாக்குகள் இல்லையென்று யார் சொன்னார்?’ என்று பூடகமான கருத்தைத் தெரிவித்துள்ளார். 

தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாமல், பாஜக-வுடன் நட்பு பாராட்டி வரும் கட்சிகளான அதிமுக மற்றும் நவீன் பட்யாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆகியவையும் தேஜகூ-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று யூகிக்கப்படுகிறது. இந்த இரண்டு கட்சிகளும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டாலும், எதிராக வாக்களிக்க வாய்ப்பில்லை எனப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பை இந்த இரு கட்சிகளும் புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 


 

.