This Article is From Sep 17, 2018

கேரள நிவாரண உதவிக்கு அதிமுக எம்எல்ஏ-க்களின் 1 மாத சம்பளம் வழங்கப்பட்டது

ஒரு மாத சம்பளத்தின் மொத்த தொகையான ரூ.1,13,20,000-க்கான வரைவோலையை முதலமைச்சர் பழனிசாமியிடம், சபாநாயகர் தனபால் வழங்கினார்

கேரள நிவாரண உதவிக்கு அதிமுக எம்எல்ஏ-க்களின் 1 மாத சம்பளம் வழங்கப்பட்டது

கடந்த ஆகஸ்டு மாதம், கேரளாவில் கனமழை பெய்தது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டது. பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தினால் சேதமடைந்தது எனவே, நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் பணிகளில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கேரள வெள்ள நிவாரணத்திற்கு, அதிமுக எம்எல்ஏ-க்களின் ஒரு மாத சம்பளம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக எம்எல்ஏ-க்களின் ஒரு மாத சம்பளத்தின் மொத்த தொகையான ரூ.1,13,20,000-க்கான வரைவோலையை முதலமைச்சர் பழனிசாமியிடம், சபாநாயகர் தனபால் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.