This Article is From Jun 15, 2019

17 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன்!!

ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் என்ற திரைப்படத்தில் மாதவனும் - சிம்ரனும் நடித்து வருகின்றனர்.

17 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன்!!

கடைசியாக கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மாதவனும் - சிம்ரனும் நடித்தனர்.

ஹைலைட்ஸ்

  • ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் படத்தில் இருவரும் நடிக்கின்றனர்
  • இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டுள்ளார் மாதவன்
  • கடைசியாக மாதவனும் சிம்ரனும் 2002-ல் ஜோடியாக நடித்திருந்தனர்
New Delhi:

17 ஆண்டுகளுக்கு பின்னர் மாதவனும் - சிம்ரனும் ஜோடி சேர்ந்துள்ளனர். விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்' என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. 

இதில் கதாநாயகனாக மாதவன் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற விவரங்கள் வெளியாகாத தற்போது சிம்ரன்தான் மாதவனுக்கு ஜோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான புகைப்படத்தை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக மாதவன் - சிம்ரன் ஜோடி 2001-ல் வெளியான கே. பாலச்சந்திரனின் பார்த்தாலே பரவசம், 2002-ல் வெளியான மணி ரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். 

ட்ரி கலர் ஃபிலிம்ஸ் சார்பாக மாதவனின் இயக்கத்தில் 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் விண்வெளி பொறியாளராக மாதவன் நடிக்கிறார். படத்தின் டீசர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின்போது வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் நம்பி நாராயணனும் ஒருவர். அவர் கடந்த 1994-ல் அரசின் ரகசிய தகவல்களை வெளிநாட்டிற்கு அளித்தார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையில் அவர் குற்றமற்றவர் என தெரியவந்தது. 

கடந்த 2019-ல் நம்பி நாராயணனுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக மாதவன் ஷாரூக்கான் நடித்த ஜீரோ திரைப்படத்தில் கவுரவ தோற்றததில் நடித்திருந்தார். 

.