This Article is From Jun 07, 2019

''5ஜி டெக்னாலஜியை நட்பு நாடுகளுக்கு வழங்குவோம்'' - சீனா அறிவிப்பு

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாயை அமெரிக்கா தடை செய்திருக்கிறது. இந்த ஹுவாய்தான் சில நாடுகளுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது.

''5ஜி டெக்னாலஜியை நட்பு நாடுகளுக்கு வழங்குவோம்'' - சீனா அறிவிப்பு

வயர்லெஸ் நெட்ஒர்க்கை பொருத்தளவில் சீனாவுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

Saint Petersburg:

நட்பு நாடுகளுக்கு 5 ஜி டெக்னாலஜியை வழங்குவோம் என்று சின தெரிவித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் அதிபர் ஜி ஜிங்பிங் வெளியிட்டுள்ளார். 

உலகின் பல நாடுகளில் 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு டேட்டா சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்தபடியாக 5 ஜி தொழில் நுட்பத்தை வளர்ந்த நாடுகள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளன. 

இதில் சீன நிறுவனமான ஹுவாய் சில நாடுகளுக்கு தொழில்நுட்ப சேவையை அளிக்கத் தொடங்கிய நிலையில் அதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்த நிலையில் ரஷ்யாவின் தலைநகர் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெற்ற பொருளாதார கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜிங் பிங் கலந்து கொண்டார். 

கூட்டத்தில் பேசிய அவர், '5ஜி தொழில்நுட்பத்தை நட்பு நாடுகளுக்கு வழங்க சீனா தயாராக உள்ளது' என்று தெரிவித்தார். 

5 ஜி தொழில் நுட்பத்தை பொறுத்தளவில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் போட்டியில் இருக்கின்றன. தொழில் நுட்பத்தை வழங்குவதாக கூறும் சீனாவின் நட்பு நாடுகளாக பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்டவை உள்ளன. 

.