This Article is From Jul 01, 2020

இந்தியாவுடனான மோதலில் மறைக்கப்படும் உண்மை! சீன வீரர்கள் அதிருப்தி

உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்டுள்ள சீனாவில், வீரர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் ஏதும் அளிக்கப்படுவதில்லை.

இந்தியாவுடனான மோதலில் மறைக்கப்படும் உண்மை! சீன வீரர்கள் அதிருப்தி

இந்திய ஊடகங்கள் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டன. ஆனால் இதனை சீனா ஏற்கவில்லை.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவுடனான மோதல் குறித்து சீனா அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை
  • இந்திய ஊடகங்கள் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டன
  • சீன ராணுவத்தின் 5.7 கோடி வீரர்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல்
Washington DC:

லடாக் எல்லையில் இந்தியாவுடனான மோதல் குறித்து சீனா அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடாமல் மறைத்து வருகிறது. இதனால் சீன படையில் இருக்கும் 5.7 கோடி முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் அந்நாட்டு அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த மாதம் 15-ம்தேதி லடாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக வீரர் பழனி உள்பட 20 பேரை இந்திய ராணுவம் இழந்தது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. முடிவில் இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டன.

அடுத்த கட்டமாக மத்திய அரசு சீனாவின் முதலீட்டுடன் இயங்கி வரும், டிக்டாக், ஹலோ உள்பட 59 ஆப்களுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்தது. இதிலிருந்து மீள்வதற்கு அந்த நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், லடாக் எல்லையில் உயிரிழந்த வீரர்கள் விவரத்தை வெளியிடாமல் சீனா மறைப்பதாக, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஜியான்லி யங் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக சீன ராணுவம் இருந்து வருகிறது. கால்வான் பள்ளத்தாக்கில் எத்தனைபேர் உயிரிழந்தார்கள் என்ற விவரத்தை சீனா வெளியிடவில்லை. ஆனால் இந்திய ஊடகங்கள் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டன. ஆனால் இதனை சீனா ஏற்கவில்லை.

அதேநேரம், இந்தியாவில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. சீனாவோ உயிரிழப்பு குறித்த விவரத்தையே வெளியிடவில்லை.

இதனால்தான் சீன ராணுவத்தின் 5.7 கோடி வீரர்கள் சீன அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்டுள்ள சீனாவில், வீரர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் ஏதும் அளிக்கப்படுவதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

.