This Article is From Mar 30, 2020

டெல்லி, உ.பி.யில் மருத்துவர்கள் தங்க 5 ஸ்டார் ஓட்டல்! மற்ற மாநிலங்கள் செயல்படுத்துமா?

டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசங்களில் உள்ள ஹயாத் ரீஜென்ஸி, ஃபேர் ஃபீல்டு ஓட்டல், பிக்காடில்லி ஓட்டல், லெமன் ட்ரீ உள்ளிட்டவை புக் செய்யப்பட்டுள்ளன. இங்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தங்க வைக்கப்படவுள்ளனர்.

டெல்லி, உ.பி.யில் மருத்துவர்கள் தங்க 5 ஸ்டார் ஓட்டல்! மற்ற மாநிலங்கள் செயல்படுத்துமா?

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்போர் தங்க 5 ஸ்டார் ஓட்டலுக்கு ஏற்பாடு
  • டெல்லி, உத்தரப்பிரதேச மருத்துவர்கள் தங்க 5 ஸ்டால் ஓட்டல்கள் புக்கிங்.
  • மற்ற மாநிலங்களுக்கும் சிறப்பான வசதி செய்து தர வேண்டுமென எதிர்பார்ப்பு
New Delhi:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காக 5 ஸ்டார் ஓட்டல்களை டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச அரசுகள் புக் செய்துள்ளன. 

உத்தரப்பிரதேச அரசு லக்னோவில் உள்ள ஹயாத் ரீஜென்ஸி, ஃபேர் ஃபீல்டு ஓட்டல், பிக்காடில்லி ஓட்டல், லெமன் ட்ரீ உள்ளிட்டவை புக் செய்யப்பட்டுள்ளன. இங்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தங்க வைக்கப்படவுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ளள ட்விட்டர் பதிவில், ''கொரோனாவுக்கு எதிரான போரில் முன் வரிசையில் நிற்பவர்கள் மருத்துவர்கள். டெல்லி லோக் நாயக் மற்றும் ஜி.பி. பண்ட் மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் லலித் ஓட்டல் தங்க வைக்கப்படவுள்ளனர்'' என்று கூறப்பட்டுள்ளது.
 

.

ராம் மனோகர் லோஹியா அரசு மருத்துவமனையில் பணிபுரியம் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் லக்னோவின் ஹயாத் மற்றும் ஃபேர் டீல் ஓட்டலில் தங்க வைக்கப்படுகின்றனர்.

பிக்காடில்லி மற்றும் லெமன் ட்ரீ ஓட்டல்கள் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்காக ஆகும் அனைத்து செலவுகளையும், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச அரசுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில் தூண்களாக செயல்படும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு உயர் ரக வசதிகளை டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச அரசுகள் அமைத்து தருகின்றன. இதேபோன்று மற்ற மாநில அரசுகளும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் முழு பலத்துடன செயல்பட உதவ வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பாக கொரோனா பரவும் என்ற அச்சத்தால், வீடுகளில் வாடகைக்கு இருக்கும் மருத்துவர்களுக்கு உரிமையாளர்கள் நெருக்கடி கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்தார். மருத்துவர்களுக்கு நெருக்கடி கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100 யை தாண்டியுள்ளது. இவர்களில் உயிரிழந்த 29 பேரும் அடங்குவர். 

.