This Article is From Jul 26, 2019

எல்லை கடந்து மீன் பிடித்த குற்றச்சாட்டு; 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை!

சர்வதேச கடல் எல்லை கட்டுப்பாட்டை தமிழக மீனவர்கள் மீறியதால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

எல்லை கடந்து மீன் பிடித்த குற்றச்சாட்டு; 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை!

தமிழக மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Colombo:

தங்கள் நாட்டு எல்லைக்கு உட்பட்ட இடத்தில் மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, இலங்கை கடற்படை, தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்துள்ளது. 

கோவிலம் துறைமுகத்துக்குப் பக்கத்தில் கடந்த 24 ஆம் தேதி, தமிழக மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படை அவர்களை கைது செய்துள்ளது. சர்வதேச கடல் எல்லை கட்டுப்பாட்டை தமிழக மீனவர்கள் மீறியதால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருக்கும் மீன்வளத் துறை துணை இயக்குநரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. 

கடல் எல்லையை ஒட்டி, இலங்கை கடற்படை ரோந்து பணியை அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இருந்து வரும் மீனவர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது அந்நாட்டு அரசு. கடந்த 2018 ஆம் ஆண்டு, ஜனவரியில், தங்கள் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் மீன் பிடிக்கும் வேறு நாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 100 மடங்கு உயர்த்தியது இலங்கை. 

.