கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 29 பேர் பலி, 17 பேர் படுகாயம்!

யமுனா அதிவேக நெடுஞ்சாலை விபத்து: விபத்து நடப்பதற்கு சற்று முன்பு டிரைவர் தூங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS

யமுனா நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து, 15 அடி பள்ள கால்வாயில் கவிழந்தது.


New Delhi: 

டெல்லி அருகே உள்ள யமுனா 6 வழிநெடுஞ்சாலை சென்று கொண்டிருந்த, பேருந்து ஒன்று 50 அடி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 29 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 படுகாயமடைந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் ஆக்ராவில் இருந்து நொய்டா செல்லா 165 கி.மீ தொலைவிலான யமுனா 6 யவழிநெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில், பேருந்து ஒன்று லக்னோவில் இருந்து 46 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென பேருந்து நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளை தொடங்கினர்.

இதுகுறித்து, உத்தர பிரதேச போலீசார் தங்களது ட்விட்டர் பதிவில், லக்னோவிலிருந்து டெல்லிக்கு பயணித்த ஒரு ஸ்லீப்பர் கோச் பேருந்து, யமுனா நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவில், பேருந்தில் சிக்கியவர்களை ஒரு குழுவினர் மீட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பயணிகள் உயிரிழந்ததற்கு தனது வருத்தத்தினையும், இரங்கல்களையும் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தோருக்கு அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

மேலும், உத்தர பிரதேச சாலை போக்குவரத்து கழகம் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................