ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்! 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை - பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய நவ்காம் செக்டர் பகுதியில் நாங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சிலரது நடமாட்டம் காணப்பட்டது. 

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்! 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை - பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

மேலும் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

Baramulla:

ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவலை தடுப்பதற்காக வேலிகள் போடப்பட்டுள்ளன. இதனை  துண்டித்து விட்டு தீவிரவாதிகள் ஊடுருவியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நவுகாம் செக்டார் என்ற பகுதியில் என்கவுன்ட்டர் நடந்துள்ளது. இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரிகள் கூறியதாவது-

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய நவ்காம் செக்டர் பகுதியில் நாங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சிலரது நடமாட்டம் காணப்பட்டது. 

தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல்  வேட்டையில் தீவிரவாதிகள் தென்பட்டனர். அவர்களை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினார்கள்.

எல்லையில் பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ளன. அதனை சேதப்படுத்தி விட்டு தீவிரவாதிகள் உள்ளே புகுந்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 2 ஏ.கே. 47 துப்பாக்கிகள், 12 தோட்டா பைகள், கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், ஒன்றரை லட்ச ரூபாய் அளவுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 250 - 300 தீவிரவாதிகள் வரையில் இருக்கக் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.