This Article is From Dec 13, 2018

வாஜ்பாய் உருவப்படம் பொறித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளியிடப்படுகிறது

ஒரு பக்கம் 100 ரூபாய் எழுத்தும் மறுபக்கம் வாஜ்பாயின் உருவப்படமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

வாஜ்பாய் உருவப்படம் பொறித்த 100 ரூபாய் நாணயம்  விரைவில் வெளியிடப்படுகிறது

கடந்த ஆகஸ்ட் 16-ம்தேதி அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வயதில் காலமானார்.

New Delhi:

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உருவப்படம் பொறித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகி உள்ளது.

வாஜ்பாய் உருவப்படம் பொறித்த 100 ரூபாய் நாணயம் 35 கிராம் எடை கொண்டதாக இருக்கும். மறுபக்கத்தில் ஆங்கிலம் மற்றும் தேவநாகரி மொழியில் 100 ரூபாய் எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும்.

இதன் அடியில் வாஜ்பாய் பிறந்த மற்றும் மறைந்த ஆண்டான 1924 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகள் அச்சிடப்பட்டிருக்கும். இது அவரது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 1924-ம் ஆண்டு வாஜ்பாய் பிறந்த ஆண்டை குறிப்பிடும். 2018-ம் ஆண்டு என்பது வாஜ்பாய் மறைந்ததை குறிக்கும்.

இதேபோன்று அசோக தூண் மத்தியில் வாய்மையே வெல்லும் என பொருள்படும் சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 1996-ம் ஆண்டின்போது 13 நாட்களும், 1998-ம் ஆண்டின்போது 13 மாதங்களும், 1999-ம் ஆண்டில் இருந்து 6 ஆண்டுகளும் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

அவரது மறைவை குறிப்பிடும் வகையில் இமயமலையின் 4 சிகரங்களுக்கு வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேபோன்று உத்தரகாண்டின் டேராடூன் விமான நிலையத்திற்கு வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

.