This Article is From Apr 26, 2019

வங்கக் கடலில் உருவாகி தமிழகத்திற்கு மழையை வழங்க காத்திருக்கும் புயல்! 10 பாயின்ட்ஸ்!!

Cyclone Fani: ஏப்ரல் 30-ம்தேதி கரையைக் கடக்கும் புயலால் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகி தமிழகத்திற்கு மழையை வழங்க காத்திருக்கும் புயல்! 10 பாயின்ட்ஸ்!!

கேரளாவில் பரவலாக கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thiruvananthapuram:

தெற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது புயலாக (Cyclone Fani) வலுப்பெற்று தமிழகத்தின் கடற்கரை பகுதியின் வழியே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால் தமிழகத்திற்கு நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி தொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்...

1. காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் மாறும். 

2. தமிழகத்தின் கடற்கரையோரமாக ஏப்ரல் 30-ம்தேதி புயல் கரையை கடக்கும். 

3. வங்கக் கடலில் உருவாகி உள்ள புயலால் தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களில் மழை பெய்யும். 

4. ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கேரளாவின் பல இடங்களில் வலுவான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. 

5. ஏப்ரல் 26-ம் தேதியில் இருந்து பலத்த காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வரையிலும் வீசக்கூடும்.

6. வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேரள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

7. கடலுக்குள் சென்றவர்கள் ஏப்ரல் 26-ம்தேதி நள்ளிரவுக்குள் வீடு திரும்ப வேண்டும் என்று கேரள முதல்வர் அலுவலகம் கோரிக்கை வைத்துள்ளது. 

8. கேரளாவின் எர்ணாக்குளம், இருக்கி, திரிச்சூர், மலப்புரம் மாவட்ட மக்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் என பொருள்படும் மஞ்சள் அலெர்ட்டை கேரள அரசு விடுத்துள்ளது. 

9. கடலோர பகுதியில் இருப்பவர்கள், கடல் மட்டத்திற்கு தாழ்வான இடத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டனர். குறிப்பாக அவர்கள் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

10. தமிழகத்தில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க :  வருகிறது ஃபனி புயல்… என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
 

.