Earth Day: இன்று உலகமெங்கும் பூமி தினத்தை கொண்டாடி வருகின்றனர். இன்று பூமி தினத்தை முன்னிட்டு கூகுள் டூடுள் வைத்து சிறப்பித்துள்ளது. பூமியின் தனித்துவத்தையும் அதன் பன்முகத்தன்மையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக கூகுள் டூடுள் வைத்து சிறப்பித்துள்ளது.
கூகுள் டூடுள் ஆறுவிதமான தனித்துவம்மிக்க பூமியின் அங்கத்தினரை அறிமுகப்படுத்துகிறது. உயரமான மரம், வேகமாக பறக்கும் பறவை, மிகச்சிறிய தவளை, அமேசான் தண்ணீர் லில்லி இலை, டைனோசர் கால மீன் வகையினம் என்று தனித்தனியாக அறிமுகப்படுத்தி பூமியின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக டூடுள் வெளியிடப்பட்டுள்ளது.
சிறகை அடிக்காமல் நீண்ட தூரம் பயணம் செய்யும் ஆல்பட் ராஸ் பறவை, உயரமாக வளரும் கோஸ்டல் ரெட் வுட் மரம், சின்ன நாணயம் அளவே உள்ள தவளை, சிறுவர்கள் உட்காரும் அளவில் உள்ள அமேசான் வாட்டர் லில்லி, 407 மில்லியன் பழமை வாய்ந்த மீன் இனம்இனம், பூமியின் ஆழமான குகையில் வாழும் ஸ்பிரிங்டேல் ஆகியவற்றின் தனித்துவத்தை நேர்த்தியான கார்ட்டூன்களின் வழி டூடுளாக அமைத்துள்ளது.