This Article is From Aug 02, 2018

2வது மனைவிக்கு முக்கியத்துவம்: முதல் மனைவி எடுத்த விபரீத முடிவு!

முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் நடந்ததாக போலீஸார் தகவல்

2வது மனைவிக்கு முக்கியத்துவம்: முதல் மனைவி எடுத்த விபரீத முடிவு!

ஹைலைட்ஸ்

  • கணவன் புறக்கணிப்பால் விபரீத முடிவை எடுத்தார் மனைவி
  • இரண்டாவது மனைவியுடன் அதிக நேரம் செலவிட்டதால் ஆத்திரம்
  • முதல் மனைவியின் சம்மதத்துடனே 2வது திருமணம் நடந்துள்ளது, போலீஸ்
Muzaffarnagar:

தன்னைப் புறக்கணித்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் கூடுதல் நேரம் செலவிட்டதால் ஆத்திரமடைந்த முதல் மனைவி கணவனின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.

உ.பியின் முசாபர்நகர் அருகே உள்ள மீம்லானா பகுதியில் இந்த திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. ஆபத்தான நிலையில் பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"முதல் மனைவியின் மூலம் குழந்தை இல்லாததால் அவரது சம்மதத்துடன் இரண்டாவதாகத் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது மனைவிக்குக் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து எப்போதும் அவரது வீட்டிலேயே கணவன் நேரத்தைச் செலவிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவி இச்செயலில் ஈடுபட்டுள்ளார்" என்று கோட்வாலி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கணவரின் உறவினர்கள் அவரது முதல் மனைவி மீது புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

.