''தலைவர் பொறுப்பில் நீடிக்க ராகுலை மீண்டும் வலியுறுத்துவோம்'' : காங். மூத்த நிர்வாகிகள்!!

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
''தலைவர் பொறுப்பில் நீடிக்க ராகுலை மீண்டும் வலியுறுத்துவோம்'' : காங். மூத்த நிர்வாகிகள்!!

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு 2 பேரின் பெயர்கள் அடிபடுகின்றன.


New Delhi: 

காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் நீடிக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறி வரும் நிலையில் அவர் தலைவர் பொறுப்பில் நீடிப்பதற்கு மீண்டும் வலியுறுத்துவோம் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதற்கு ராகுலின் பொறுப்பற்ற தலைமை முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயன்று முடியாமல் போன கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தின.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்து அதில் விடாப்பிடியாக உள்ளார். இதேபோன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காங்கிரஸ் தலைவர் என்ற பொறுப்பை நீக்கி விட்டார். 

இதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷில் குமார் ஷிண்டே, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரது பெயர்கள் காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு அடிபட்டன. 

இந்த நிலையில் ராகுலை மீண்டும் தலைவர் பொறுப்பில் நீடிப்பதற்கு வலியுறுத்துவோம் என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூத்த தலைவர் மோதிலால் வோரா கூறுகையில், 'காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடும்போது, ராகுலை தலைவர் பொறுப்பில் நீடிக்குமாறு மீண்டும் வலியுறுத்துவோம்' என்று தெரிவித்தார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................