ரயில் மூலம் வரும் தண்ணீர் சென்னையின் தேவையை பூர்த்தி செய்யுமா…? : வாய்ப்பில்ல ராஜா

தினமும் சென்னையிலிருந்து 350 கி.மீ தூரத்திலுள்ள மேட்டூர் நீர்தேக்கத்திலிருந்து ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர்களை ஏற்றிச் செல்ல தினமும் நான்கு முறை ரயில் மூலம் நீர் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ரயில் மூலம் வரும் தண்ணீர் சென்னையின் தேவையை பூர்த்தி செய்யுமா…? : வாய்ப்பில்ல ராஜா

சிறப்பு ரயில்களின் மூலம் நீர் வழங்கல் சென்னையின் தினசரி தேவையில் 2 சதவீதத்த்திற்கும் குறைவாக இருக்கும். 

Chennai:

சென்னைக்கு 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீரை ஏற்றிச் செல்லும் முதல் 50 வேகன் கொண்ட ரயில் நேற்று சென்னைக்கு வந்தது. ஆனால், சிறப்பு ரயில்களில் தண்ணீர் கொண்டு செல்வது சென்னை நகரத்தின் தண்ணீர் பிரச்னைகளைத் தீர்க்காது.  சென்னை நகரத்தின் தண்ணீர் பிரச்னைக்கு தினமும் 525 மில்லியன் லிட்டர் தேவைப்படுகிறது.

இந்த ஆண்டு சென்னை கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. சென்னை நகருக்கு வெளியே உள்ள நான்கு நீர்த்தேக்கங்களும் வறண்டு போனதால் நீர் விநியோகம் 40 சதவீதம் குறைந்துள்ளது. நகரின் பல பகுதிகளில் தனியார் டேங்கர்களால் தண்ணீர் விலை இரட்டிப்பாகியுள்ளது.

நகரிலிருந்து 350 கி.மீ தூரத்திலுள்ள மேட்டூர் நீர்தேக்கத்திலிருந்து ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர்களை ஏற்றிச் செல்ல தினமும் நான்கு முறை ரயில் மூலம் நீர் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும் சிறிப்பு ரயில்களால் நீர் விநியோகத்தை அதிகரிக்க முடியாமல் போகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மழை பெய்யவில்லை. இது நீர் பற்றாக்குறைக்கு வழி வகுத்தது. தண்ணீர் டேங்கர் மூலமாக தண்ணீர் வழங்க டேங்கரகளை இரண்டு மடங்கு அதிகப்படுத்தியுள்ளோம். தினம் 12,000 ட்ரிப் மேற்கொள்ளப்படுகின்றன. அனைவருக்கும் தண்ணீர் கொடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்  நீர்மேலாண்மை அதிகாரி ஹர்மந்தர் சிங் கூறினார்.  சென்னை வாழ் மக்களும் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர். 

சென்னையில் வசிக்கும் ஓய்வு பெற்ற சுகாதார அதிகாரி ஷாஜி மேத்யூஸ் தனது வீட்டில் 12,000 லிட்டர் தண்ணீர் தொட்டியை நிரப்ப தனியார் தண்ணீர் சப்ளையர்களை நம்பி இருப்பதாக கூறுகிறார். தண்ணீர் டேங்கருக்கு ரூ. 2,000 கொடுத்தது தற்போது ரூ. 5000 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நான் ஒரு ஓய்வூதியதாரர் எனது ஓய்வூதிய பணத்தில் பாதி தண்ணீர் வாங்கவே செலவாகி விடுகிறது என்று  கூறுகிறார்.

மத்திய சென்னையில் வசிக்கும் தொழில் முனைவோர் ராஜா, தண்ணீர் வாங்க மாதம் ரூ. 75,000 வரை செலவு செய்வதாக கூறுகிறார். “எங்களின் ஆழ்துளைக் கிணறு வறண்டு விட்டது. ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,900 முதல் 2,100 வரை தண்ணீருக்காக செலவழித்தோம். இப்போது நாங்கள் மாதத்திற்கு ரூ.4,500 க்குமேல் செலுத்துகிறோம் என்று கூறுகிறார்.

தோராயமான மதிப்பீடுகளின் படி சிறப்பு ரயில்களின் மூலம் நீர் வழங்கல் சென்னையின் தினசரி தேவையில் 2 சதவீதத்த்திற்கும் குறைவாக இருக்கும். 

Listen to the latest songs, only on JioSaavn.com