This Article is From Nov 20, 2019

திருமணத்தில் தங்கத்திற்கு பதிலாக தக்காளி மாலையை அணிந்த மணப்பெண்! காரணம் தெரியுமா?!!

மணப்பெண் அளித்துள்ள நேர்காணல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கிண்டலாக கமென்ட் அளித்துள்ளனர். 

திருமணத்தில் தங்கத்திற்கு பதிலாக தக்காளி மாலையை அணிந்த மணப்பெண்! காரணம் தெரியுமா?!!

தக்காளி மாலையுடன் மணப்பெண்.

திருமணத்தின்போது, தங்க நகைகளை அணியாமல் தக்காளி மாலை, தக்காளி பிரேஸ்லெட் போன்ற தக்காளியால் செய்யப்பட்ட ஆபரணங்களை மணப்பெண் ஒருவர் அணிந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாகிஸ்தானில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மணமகளின் இந்த வினோத தோற்றத்தை பார்த்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அவரிடம் பேட்டி எடுத்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள மணப்பெண், 'தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. தக்காளியின் விலையும் தங்க விலையேற்றத்திற்கு சளைத்தது அல்ல. தக்காளியும் விலை உயர்ந்தது என்பதால் அதனை ஆபரணமாக அணிந்திருக்கிறேன்'  என்று கூறியுள்ளார். 
 
:

பி.டி.ஐ. செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, பாகிஸ்தானில் தக்காளி கிலோ ஒன்று ரூ. 300-க்கு விற்பனையாகிறது. 
 
மணப்பெண் அளித்துள்ள நேர்காணல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கிண்டலாக கமென்ட் அளித்துள்ளனர். 
 
தக்காளி விலையேற்றத்திற்கு காரணமான அரசை, இந்தளவு யாரும் கலாய்க்க முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Click for more trending news

.