This Article is From Feb 26, 2019

பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது ஏன்?–அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் இந்திய விமானப்படை இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது.

பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது ஏன்?–அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

விமானப்படை நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • பாலகோட்டில் ஆண்டு கணக்கில் தீவிரவாதிகள் பயிற்சி பெற்றுள்ளனர்
  • இம்ரான் கானுக்கு பாலகோட் தீவிரவாத முகாம் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு
  • மிக கடுமையான பயிற்சிகள் தீவிரவாதிகளுக்கு பாலகோட்டில் அளிக்கப்பட்டுள்ளது
New Delhi:

பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்த புதிய தகவல்கள் வெளி வந்துள்ளன. காஷ்மீரை ஒட்டி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளது. அங்கிருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் பாலகோட் பகுதி அமைந்திருக்கிறது.

இந்த இடத்தில்தான் தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலை உச்சியில் அமைந்திருக்கும் பாலகோட்டை அடர்ந்த வனங்கள் சூழ்ந்து மறைவையும் பாதுகாப்பையும் அளிக்கின்றன.

உளவுத்துறையின் தகவல்படி, புல்வாமா தாக்குதலை தொடர்ந்து அடுத்த தாக்குதலை நடத்துவதற்கு தீவிரவாதிகள் தயாராகி வந்தனர். அவர்களுக்கு பாலகோட்டில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததால், அங்கு அடித்தால்தான் சரியானதாக இருக்கும் என்று உளவுத்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000- ரகத்தை சேர்ந்த 12 விமானங்கள், பாலகோட்டில் குண்டுமழை பொழிந்துள்ளன. பாலகோட் தீவிரவாத முகாமை, புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரின் மைத்துனர்தான் நிர்வகித்து வந்துள்ளார்.

இதே இடத்தில் ஆண்டுக்கணக்கில் தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்திருக்கின்றனர். எனவேதான் பாலகோட் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இங்கு தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவர்கள் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத்தினர். நவீன ரக துப்பாக்கிகள், யுத்த தந்திரங்கள், வெடி குண்டுகளை தயாரிப்பது, தற்கொலைப்படை தாக்குதல், ராணுவ வாகனங்களை ஹைஜாக் செய்வது, மிக மோசமான சுற்றுச்சூழலில் தற்காத்துக் கொள்வது போன்ற மிக கடுமையான பயிற்சிகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாலகோட் தீவிரவாத முகாம் குன்ஹார் ஆற்றின் அருகே அமைந்திருப்பதும் தீவிரவாதிகளுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த இடத்திற்கு மசூத் அசாரும், மற்ற முக்கிய தீவிரவாத தலைவர்களும் அடிக்கடி வருவார்களாம்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சொந்தமான இடங்களுக்கு மிக அருகில்தான் பாலகோட் உள்ளது. எனவே இதுபற்றி அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று இந்தியா தரப்பில் கருதப்படுகிறது.

 

மேலும் படிக்க : ‘'பாதுகாப்பான கையில் நாடு உள்ளது'' - விமானப்படை தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கருத்து

.