பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை!! மேற்கு வங்கத்தில் பதற்றம்!

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை!! மேற்கு வங்கத்தில் பதற்றம்!

மேற்கு வங்கத்தின் பசிர்கத் நகரில் சம்பவம் நடந்துள்ளது.

North 24 Parganas, West Bengal:

மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் குறிப்பிடத்தகுந்த வகையில் ஆதரவு ஏதும் இல்லாமல் இருந்த பாஜக இந்த தேர்தலில் அதிரடியாக தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டது.

இங்கு மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதியில் பாஜக 18 இடங்களை கைப்பற்றியது. ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு 22 இடங்கள் கிடைத்தன. இந்த நிலையில், அங்கு பாஜகவை சேர்ந்த கட்சி நிர்வாகி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சரஸ்வதி தாஸ் என்ற பெண் நிர்வாகியான அவர், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிக்கு கடுமையாக உழைத்தவர் என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக நிர்வாகி சரஸ்வதி தாசை திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்திருப்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. உள்துறை அமைச்சராக முதல்வர் மம்தாதான் இங்கு உள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.