This Article is From Aug 06, 2020

கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: அணைகளை திறந்த கர்நாடகா!

மகாராஷ்டிராவின் எல்லையான பெல்காவி மற்றும் பிற வடக்கு மாவட்டங்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள குடகு மாவட்டத்திலும் பலத்த மழை பெய்துள்ளது.

கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: அணைகளை திறந்த கர்நாடகா!

Bengaluru:

கர்நாடகாவில் பல மாவட்டங்களில், குறிப்பாக கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் நதிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வெள்ளம் வராமல் இருக்கவும், தண்ணீரை வெளியேற்றவும் உத்தர் கன்னட மாவட்டத்தில் உள்ள பெரிய அணையை மாநில அரசு திறந்துள்ளது. இதேபோல், மற்ற அணைகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

பல நதிகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் அளவு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் எடியூரப்பா தொடக்க நிலை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.50 கோடி நிதியை விடுவித்துள்ளார். 

குடகு மாவட்டத்தில் பலத்த மழை பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் தான் பிரபல சுற்றுலா தலமான கூர்க் அமைந்துள்ளது. இதேபோல், அங்கு மற்றொரு பிரபலமான கடற்கரைப்பகுதியான கோகரனாவும் அமைந்துள்ளது. இந்தியாவின் மிக உயரமான நீர் வீழ்ச்சிகளில் ஒன்றான ஜாக் நீர்வீழ்ச்சியும் இங்கு அமைந்துள்ளது. 

கடலோர மாவட்டங்களான உத்தர கன்னடம், தட்சிணா கன்னடம் மற்றும் உடுப்பி ஆகியவை பலத்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மகாராஷ்டிராவின் எல்லையான பெல்காவி மற்றும் பிற வடக்கு மாவட்டங்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள குடகு மாவட்டத்திலும் பலத்த மழை பெய்துள்ளது.

t58qvgss

காவிரி ஆற்றின் மூலமான குடகுவில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மாநிலத்தில் அதிக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் மூலமான கொடகுவில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கோவா-கர்நாடக எல்லையில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு, மூன்று நாட்களில் இப்பகுதியில் பெய்த மழையால் உடுப்பி, தட்சிணா கன்னடம், உத்தர கன்னடம், சிக்கமங்களூர், சிவ்மோகா, குடகு மற்றும் ஹாசன் உள்ளிட்ட இடங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் சி.எஸ்.பாட்டீல் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு, கர்நாடகா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்ந்ததால், பொறுப்பேற்ற எடியூரப்பா முதல் பணியாக வெள்ள நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட மாவட்டங்களுக்குச் சென்றார். 

அண்டை மாநிலமான மகராஷ்டிராவில், பெய்த பலத்த மழையால் மும்பை பகுதியே முடங்கியது. தற்போது அங்கு நிலைமை மேம்பட்டு, புறநகர் ரயில்கள் இயங்கினாலும், இன்றும் அதிக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. 
 

.