கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

சித்தராமையாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். 

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

New Delhi:

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பரிசோதனை முடிவுகளில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனையின்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் அறிகுறிகள் உள்ளதா என்பதை கவனித்து, தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் என்ற அவர் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் கேரளாவில் முதல் தொற்று பதிவான நிலையில், தற்போது நாட்டில் 18 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, கர்நாடகாவில் கொரோனா பாதித்த இரண்டாவதாக முக்கிய தலைவராக சித்தராமையா உள்ளார். 

நேற்று முன்தினம் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது அலுவலக ஊழியர்கள் ஆறு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து, அவரது மகள் பத்மாவதியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியான ஒரு சில மணி நேரத்தில் எடியூரப்பாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

கர்நாடகாவில் 5,532 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மாநில அளவில் பாதிப்பு எண்ணிக்கையானது 1,34,819 ஆக உள்ளது. இதில் 745,90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் பெங்களூரில் மட்டும் 59,501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 37,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.