This Article is From Aug 06, 2020

தொடர் கனமழை: தேவைப்பட்டால் நிவாரணப் பணிகளுக்கு மேலும் நிதி விடுவிக்கப்படும்: எடியூரப்பா

ஏற்கனவே ரூ.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் முதல்வரால் அதிக நிதி விடுவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை: தேவைப்பட்டால் நிவாரணப் பணிகளுக்கு மேலும் நிதி விடுவிக்கப்படும்: எடியூரப்பா

தொடர் கனமழை: தேவைப்பட்டால் நிவாரணப் பணிகளுக்கு மேலும் நிதி விடுவிக்கப்படும்: எடியூரப்பா

Bengaluru:

கர்நாடகா முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தேவைப்பட்டால் அதிக நிதி விடுவிக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பா முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொகுதி எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த இடத்திலையே உடனடியாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ரூ.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் முதல்வரால் அதிக நிதி விடுவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் அதிகரித்து வரும் மழைப்பொழிவைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில தலைமைச் செயலாளரிடம் எடியூரப்பா கேட்டுக் கொண்டார். மேலும், அவசரநிலைகளுக்கு ரூ.50 கோடியை விடுவிப்பதற்கான வழிமுறைகளையும் வழங்கினார். 

கர்நாடகாவில் பெய்த கனமழையால் சிக்மங்களூர் மாவட்டத்தில் முதிகேரே அருகே நிலச்சரிவு ஏற்பட்டது, அதே நேரத்தில் குடகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையான தேக்கம் ஏற்பட்டதால் வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருகின்றன. 

"கடந்த இரண்டு, மூன்று நாட்களில் இப்பகுதியில் பெய்த மழையால் உடுப்பி, தட்சிணா கன்னடம், உத்தர கன்னடம், சிக்கமங்களூர், சிவ்மோகா, குடகு மற்றும் ஹாசன் உள்ளிட்ட இடங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் சி.எஸ்.பாட்டீல் தெரிவித்துள்ளார். 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.