This Article is From Jun 11, 2019

பில் கேட்ஸ், வாரன் பஃபெட் இதெல்லாம் செய்வார்களா? வைரல் வீடியோ

சில நாட்களுக்கு முன்பு வாரன் பஃபெட்டின் நட்பினை பாராட்டும் விதமாக ஒரு விடியோவை பகிர்ந்தார் பில் கேட்ஸ். 

பில் கேட்ஸ், வாரன் பஃபெட் இதெல்லாம் செய்வார்களா? வைரல் வீடியோ

டயரி க்யூனில் வாரன் பஃபெட் மற்றும் பில் கேட்ஸ்

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் தவறாமல் இடம் பெறும் இருவர் பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகிய இருவர் ஆவர். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் கூட. பண திமிரு இல்லாத இவ்விருவரும் சமீபத்தில் செய்த செயல் ஒன்று அனைவராலும் பாராட்டப்படுகிறது.

ஒமாஹாவிலுள்ள டயரி க்யூன் (Dairy Queen) என்னும் ஒரு சிற்றுண்டியில் பில் கேட்ஸ் மற்றும் பஃபெட் இருவரும் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு தயாரித்து பறிமாறியுள்ளனர்.

‘ஒமாஹாவிலுள்ள பெர்க்சையர் ஹாட்டவேயில் மீட்டிங்யில் கலந்து கொள்ள வந்த நாங்கள், மதிய உணவிற்காக டயரி க்யூன் சென்றோம். அங்கு உணவு பரிமாறவும் செய்தோம்' என ட்விட் செய்தார் பில் கேட்ஸ். மேலும் ஒரு வீடியோவையும் அவர் பகிர்ந்தார்.

1998 யில் டயரி க்யூன் நிறுவனமானது வாரன் பஃபெட் வசமானது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட்டை இந்த வீடியோவில் காணலாம்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. பலர் இந்த வீடியோவிற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்கள் பதிவு செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு வாரன் பஃபெட்டின் நட்பினை பாராட்டும் விதமாக ஒரு விடியோவை பகிர்ந்தார் பில் கேட்ஸ். 

Click for more trending news


.