This Article is From Apr 12, 2019

ஆங்கிலத்தில் பேசி அசத்தும் பீகார் கூலித் தொழிலாளி…! வீடியோ

அந்த தொழிலாளி “யெஸ், ஒய் நாட்” என்று பதிலளிக்கிறார்.

ஆங்கிலத்தில் பேசி அசத்தும் பீகார் கூலித் தொழிலாளி…! வீடியோ

அவரின் நம்பிக்கையும் திறமையும் ஆச்சரியத்தை கொடுக்கிறது” என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்

பீகார் மாநிலத்தை சேர்த்த தினசரி ஊதிய தொழிலாளி ஒருவர் ஆங்கிலத்தில் பேசும் வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோ ஹிந்தி செய்தி நிறுவனத்தின் ரிப்போர்ட்டர்  செளராப் திரிபாதி எடுக்கும் நேர்காணலாக இது வருகிறது 2019  லோக் சபா தேர்தலுக்கான கருத்தினை தொழிலாளி பேசுகிறார். 

ரிப்போர்ட்டர் கேட்ட கேள்விக்கு “நான் வேலை செய்ய விரும்புகிறேன்” என்று ஆங்கிலத்தில் அந்த தொழிலாளி பதிலளிக்கிறார்

பதிலால் ஈர்க்கப்பட்ட அந்த நிருபர் “ஆங்கிலமா..?” என்று வியந்து கேட்க அதற்கு  அந்த தொழிலாளி “யெஸ், ஒய் நாட்” என்று பதிலளிக்கிறார்.

தொழிலாளி பாகால்பூர் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என தன்னை அறிமுகப்படுத்துகிறார். முன்னாள் பிரதமர் இந்திர காந்தியின் அரசாங்கத்தையும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தையும் ஒப்பிட்டு பேசுகிறார்.

“நவீன காலத்தில் மோடி சிறந்தவர்” என்று கூறும் அவர் “ முந்தைய காலத்தில் இந்திர காந்தி சிறந்தவர்” என்று கூறுகிறார்.

அவரின் ஆங்கிலப் புலமையை கூட்டமே பாராட்டுகிறது. நிருபர்  “உங்கள் ஆங்கிலம் நன்றாக இருக்கிறது” என்று பாராட்டுகிறார். இந்த வீடியோவை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து பகிர்ந்தும் உள்ளனர். 5,000க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர்.

ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து முடிவு  செய்யக்கூடாது என்று ஒருவர் கமெண்ட் செய்து உள்ளார்.அவரின் நம்பிக்கையும் திறமையும் ஆச்சரியத்தை கொடுக்கிறது” என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்

.