போலி செய்திகளே புலம் பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வுக்கு காரணம்: மத்திய அமைச்சர்

“இருப்பினும், மத்திய அரசு இதை முழுமையாக அறிந்திருந்தது, தவிர்க்க முடியாத பூட்டப்பட்ட காலகட்டத்தில், எந்தவொரு குடிமகனும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை இழக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

போலி செய்திகளே புலம் பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வுக்கு காரணம்: மத்திய அமைச்சர்

புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து, நித்யானந்த் ராய் அந்த விவரங்கள் "மையமாக பராமரிக்கப்படவில்லை" என்று பதிலளித்தார்

New Delhi:

போலி செய்திகளே புலம்பெயர்ந்தோர் வெளியேற்றத்திற்கு காரணமாகின்றன என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மாலா ராய் மார்ச் 25 ஆம் தேதி பூட்டுதல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீட்டிற்கு நடந்து செல்வதற்கான காரணங்கள் மற்றும் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்,

“ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இடம்பெயர்வுக்கு காரணம் போலி செய்திகளே என்றும், மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உணவு, குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகளை போதுமான அளவில் வழங்குவது குறித்து கவலையை கொண்டிருந்தனர்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “இருப்பினும், மத்திய அரசு இதை முழுமையாக அறிந்திருந்தது, தவிர்க்க முடியாத பூட்டப்பட்ட காலகட்டத்தில், எந்தவொரு குடிமகனும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை இழக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, “மார்ச் 28 ம் தேதி மாநில அரசுகள் முழு முடக்கத்தினை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு, தற்காலிக தங்குமிடம், உணவு, உடை, மருத்துவ பராமரிப்பு போன்றவற்றை வீடற்ற மக்களுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வழங்கியது. மாநிலங்களுடனான நிதியை அதிகரிப்பதற்காக, ஏப்ரல் 3 ஆம் தேதி மாநில பேரிடர் நிதியில் இருந்து மாநிலங்களுக்கு ரூ .11, 092 கோடியை முன்கூட்டியே வெளியிட்டது.” என்றும் அவர் தனது எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்கள் இடம் பெயரும் போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் நிவாரணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார், “மத்திய அரசு இது குறித்த எந்த தரவுகளையும் சேகரிக்கவில்லை” என்று மக்களவையில் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.