எடிட் இல்லை… ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இல்லை…. டிக் டாக்கில் கலக்கும் ‘டான்ஸ் ஜோடி’!

டிக் டாக் செயலியில் பதிவிட்டிருக்கும் தகவல்கள் அடிப்படையில், வீடியோவில் வரும் மகாதோ, ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

எடிட் இல்லை… ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இல்லை…. டிக் டாக்கில் கலக்கும் ‘டான்ஸ் ஜோடி’!

இதுவரை அவர்களது வீடியோக்கள் 2.4 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. 

சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு தளங்களில் உள்ள நபர்களின் திறமை வெளி உலகுக்குத் தெரிந்து வருகிறது. இதில் சமீபத்திய சென்சேஷனாக மாறியிருப்பது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அண்ணன்- தங்கை ‘நடன ஜோடி'. டிக் டாக் தளத்தில் அவர்கள், எந்த வித ஒப்பணைகளோ, எடிட்டோ அல்லது ப்ராப்போ இல்லாமல் பதிவிட்டு வரும் துள்ளல் நடனங்களுக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர்களின் டிக் டாக் பக்கத்தை இதுவரையில் 10 லட்சத்திற்கு அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். தற்போது அந்த டான்ஸ் ஜோடி, ட்விட்டர் தளத்தில் வைரலாகியுள்ளது. 

பிரபல இந்தி தொலைக்காட்சி ஹோஸ்ட் ஆன மினி மத்தூர் என்பவர், ஜார்கண்ட டான்ஸ் ஜோடி குறித்தான வீடியோவைப் பகிர்ந்ததிலிருந்து அவர்கள் பேசு பொருளாக மாறியுள்ளனர். 

“இந்தக் காலையில் இதைத்தான் நான் பார்க்க விரும்பினேன்!! 2020 ஆம் ஆண்டு நேர்மறையான எண்ணங்களோடு வாழ்க்கை நகர்த்த முயல்பவர்கள் அனைவருக்கும் என் அன்பு,” என்று மத்தூர் வீடியோவோடு பதிவிட்டுள்ளார். 

ட்விட்டரில் மாத்தூர் பகிர்ந்த வீடியோவுக்குப் பல்லாயிரம் பார்வைகள் குவிந்துள்ளன. டிக் டாக் தளத்தில் அந்த வீடியோவுக்கு 39 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மத்தூர் மட்டுமல்ல, பல பிரபலங்கள் டான்ஸ் ஜோடியின் வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

வீடியோவுக்குக் கீழ் ஒரு ட்விட்டர் பயனர், “லவ்லி..! வாவ்” என்று கருத்திட்டுள்ளார். இன்னொருவர், ‘இது மிக அழகாக உள்ளது' என்கிறார்.

டிக் டாக் செயலியில் பதிவிட்டிருக்கும் தகவல்கள் அடிப்படையில், வீடியோவில் வரும் மகாதோ, ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரது சகோதரியும் அவருடன்தான் உள்ளார். சில நடன வீடியோக்களோடு, நகைச்சுவை வீடியோக்களையும் அவர்கள் தங்கள் டிக் டாக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதுவரை அவர்களது வீடியோக்கள் 2.4 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. 

Click for more trending news