This Article is From May 19, 2020

சிறுத்தையை ரவுண்டு கட்டி அலறவிட்ட தெரு நாய்கள் - அதிர்ச்சி வீடியோ!!

பல்லாயிரம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவுக்குப் பலரும் ஷாக் கமென்ட்ஸ் இட்டு வருகின்றனர். 

சிறுத்தையை ரவுண்டு கட்டி அலறவிட்ட தெரு நாய்கள் - அதிர்ச்சி வீடியோ!!

கடந்த வியாழக் கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

ஐதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்தான வீடியோ நெட்டிசன்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தெலங்கானா மாநில தலைநகரமான ஐதராபாத்தில் பட்டப் பகலில் ஒரு நபரை சிறுத்தைத் துரத்துகிறது. ஒரு கட்டத்தில் அந்த நபரை தாக்குகிறது சிறுத்தை. ஆனால் அதன் பின்னர் சில தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு சிறுத்தையை அலறவிட்டுள்ளன. 

சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள இந்த சிசிடிவி வீடியோவில், இரு நபர்களை ஒரு சிறுத்தை துரத்துகிறது. ஒருவர், அருகிலிருக்கும் லாரியில் சட்டென்று ஏறித் தப்பிக்கிறார். இன்னொருவர் எங்கே போவது என்று தெரியாமல் திக்கு முக்காடுகிறார். ஒரு கட்டத்தில் அவரும் முதல் நபர் சென்ற லாரிக்கு உள்ளேயே செல்லலாம் என்று முயல்கிறார். அப்போது சிறுத்தை அந்த நபரின் காலைக் கடித்து இழுக்கப் பார்க்கிறது. ஆனால், தன் விடாப்பிடியான முயற்சியால் லாரிக்குள் பத்திரமாக ஏறி விடுகிறார் அந்த நபர். 

இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஒரு தெருநாய் குழு, சம்பவ இடத்திற்கு வருகிறது. சிறுத்தையைப் பார்த்து மிக சத்தமாக அனைத்து நாய்களும் குரைக்கின்றன. இதனால், சுவற்றில் ஏறித் தப்பிக்கத் திண்டாடுகிறது சிறுத்தை. பின்னர், நாய்கள் பயமுறுத்த அது உருமுகிறது. அதன் பின்னர், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பித்துவிடுகிறது. 

கடந்த வியாழக் கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

அதிர்ச்சியூட்டும் வீடியோவைப் பார்க்க:

பல்லாயிரம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவுக்குப் பலரும் ஷாக் கமென்ட்ஸ் இட்டு வருகின்றனர். 

தெலங்கானாவைச் சேர்ந்த Forests and Wildlife Protection Society என்னும் அமைப்பு, இந்த சம்பவம் பற்றி சொல்கையில், ‘சிறுத்தையை நாய்கள் அருகிலிருந்த குட்டை வரை துரத்திச் சென்றுள்ளன. ஆனால், சிறுத்தை இன்னும் வெட்ட வெளியில்தான் சுற்றி வருகின்றது' என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்திய அளவில் முழு முடக்க உத்தரவு போடப்பட்டதிலிருந்து பல காட்டு விலங்குகள், மனிதர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உலவி வருகின்றன. இது குறித்தான செய்திகளும் காணொலிகளும் வந்த வண்ணம் உள்ளன. 

Click for more trending news


.