This Article is From Oct 23, 2019

Video: பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்ட விமானம்

சிலர் ‘கூகுள் மேம் பார்த்து பயணித்தால் இதுதான் கதி’ என்று ட்விட்டர் வாசிகள் கேலி செய்து வருகின்றனர். 

Video: பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்ட விமானம்

இந்த வீடியோவை யூ ட்யூப்பில் 12,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

சீனாவின் ஹார்பின் நகரத்தில் என்ற பாலத்தின் கீழ் ஒரு விமானம் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் திணறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

புதியதாக தயாரிக்கப்பட்ட விமானத்தின் ஒரு பகுதியை ட்ரக்கில் வைத்து ஏற்றிச் செல்லும் போது அந்த ட்ரக் பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. இந்த விமானத்தை மீட்க ஊழியர்கள் போராடி வருகின்றனர். 

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோவை யூ ட்யூப்பில் 12,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். ட்விட்டரில் 27,000 பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ பல கமெண்டுகளை பெற்று வருகிறது. 

சிலர் ‘கூகுள் மேம் பார்த்து பயணித்தால் இதுதான் கதி' என்று ட்விட்டர் வாசிகள் கேலி செய்து வருகின்றனர். 

நியூ சீனா டிவியின்  செய்திப்படி ட்ரெய்லர் ட்ரக்கின் டயர்கள் நீக்கப்பட்டு பாலத்தின் அடியிலிருந்து விமானத்தை நகர்த்திய பின்னர் ட்ரக்கின் டயர்கள் மீண்டும் உயர்த்தப்பட்டன. அதன்பின் அந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். 

சில நாட்களுக்கு முன்பு, இத்தாலியில் விபத்துக்குள்ளானது. ஸ்கை லிப்ட் கேபிள்களிலிருந்து தொங்கும் விமானத்தின் படங்கள் ஆன்லைனில் வைரலாகிவிட்டது. 

Click for more trending news


.