This Article is From Dec 21, 2018

நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு!

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜய்மல்லையா, தீர்ப்பு குறித்து விரிவாக விசாரித்த பின், அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு!

நாடு கடத்தும் தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிகிறது.

London:

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. 

இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இதில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை இந்தியா தாக்கல் செய்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் அடுத்தகட்ட முயற்சிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நாடு கடத்தும் தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் மூலம் தெரியவந்துள்ளது.

.