This Article is From Jul 23, 2019

கங்கையில் மூழ்கும் நபரைக் காப்பாற்ற உயிரை துட்சமென நினைத்து குதித்த போலீஸ்! #Video

கங்கை நதிக்கரையையொட்டி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கங்கையில் மூழ்கும் நபரைக் காப்பாற்ற உயிரை துட்சமென நினைத்து குதித்த போலீஸ்! #Video

இந்த சம்பவத்தில் தனது வீரத்தை வெளிப்படுத்திய போலீஸின் பெயர் சன்னி என்று தெரியவந்துள்ளது.

கங்கை நதியில் நீச்சல் தெரியாமல் மூழ்கும் நபரைக் காப்பாற்ற, தனது உயிரை துட்சமென நினைத்து குதித்துள்ளார் உத்தரகாண்ட் போலீஸ் ஒருவர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆற்றில் குதித்த போலீஸுக்கு நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். 

இது குறித்த வீடியோவை உத்தரகாண்ட் போலீஸே, தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், லைஃப் ஜாக்கெட் அணிந்த காவலர் ஒருவர் ஆற்றின் கரையோரம் நிற்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு நபர், ஆற்றின் வெள்ளப் போக்கால் அடித்துச் செல்லப்படுகிறார். ஆற்றின் கரையைச் சுற்றி பலர் இருந்தாலும், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். அப்போது வீரமிக்க அந்த போலீஸ், சட்டென்று நீரில் குதித்து, அந்த நபரிடம் செல்கிறார். தொடர்ந்து அந்த போலீஸ், அந்த நபரை கரைக்கு அழைத்து வருகிறார். இந்த சம்பவத்தில் தனது வீரத்தை வெளிப்படுத்திய போலீஸின் பெயர் சன்னி என்று தெரியவந்துள்ளது. ஹரித்வார் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. 
 

வீடியோவைப் பாருங்கள்:

விஷால், ஹரித்வாருக்கு புனித நீராட சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளதாக உத்தரகாண்ட் போலீஸ் கூறுகிறது. பலரும் இந்த சம்பவத்தில் தனது உயிரைப் பணயம் வைத்த போலீஸுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

கங்கை நதிக்கரையையொட்டி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில்தான் அங்கு கன்வார் யாத்திரையும் நடந்து வருகிறது. இந்த யாத்திரையையொட்டி புனித நீராட வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருக்க பல காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

Click for more trending news


.