ஆற்றில் மூழ்கிய மனிதரை தும்பிக்கையால் காப்பாற்றிய குட்டி யானை! வைரலாகும் வீடியோ!!

குட்டி யானையின் வீடியோ சுமார் 67 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவுக்கு கமென்ட் செய்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஆற்றில் மூழ்கிய மனிதரை தும்பிக்கையால் காப்பாற்றிய குட்டி யானை! வைரலாகும் வீடியோ!!

தும்பிக்கையால் குட்டி யானை காப்பாற்றியுள்ளது.


ஆற்றில் மூழ்கிய மனிதரை தும்பிக்கையால் குட்டி யானை ஒன்று மீட்டெடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருந்தாலும், இப்போது பார்க்கும் போதும் சுவாரசியத்தை இந்த வீடியோ ஏற்படுத்துகிறது. 

யானைகள் கூட்டமாக நின்றிருக்க மனிதர் ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறார். இதனைப் பார்த்த குட்டி யானை ஒன்று அவரது அருகே சென்று தும்பிக்கையை நீட்டுகிறது. அவர் அதனைப் பிடித்து தனது உயிரை காப்பாற்றிக் கொண்டார். 
 

Watch the video below:

இந்த வீடியோ தற்போது 67 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இதற்கு கமென்ட் செய்துள்ளனர். 

மிகவும் அழகான புத்திசாலியான விலங்கு யானை என்றும், அன்பு என்ற சொல்லுக்கு இந்த சம்பவம்தான் சாட்சி என்றும் பலர் கமென்ட் அடித்து வருகின்றனர். 

தாய்லாந்து நாட்டில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அங்குள்ள காம் லா என்ற இடத்தில் யானைகள் அதிகளவு வசிக்கின்றன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................