This Article is From Jun 08, 2019

உ.பி.யில் 2 நாட்களாக புழுதிப் புயல் – 26 பேர் உயிரிழப்பு!!

புழுதிப்புயல் நிவாரண மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.யில் 2 நாட்களாக புழுதிப் புயல் – 26 பேர் உயிரிழப்பு!!

புழுதிப் புயல் தாக்குதலுக்கு 57 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Lucknow:

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2 நாட்களாக வீசி வரும் புழுதிப் புயலுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளனர். 57 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினமும், நேற்றும் புழுதிப் புயலின் தாக்கம் உத்தர பிரதேசத்திலும் அண்டை நாடான நேபாளத்திலும் காணப்பட்டது. இதன் கோரத் தாக்குதலுக்கு நேற்று வரை 19 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று கால்நடைகளும் பாதிப்பு அடைந்துள்ளன. 22 மாவட்டங்களில் 31 கால்நடைகள் உயிரிழந்ததுடன், 20-க்கும் அதிகமான வீடுகள் சேதடைந்தன.

நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமா அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த 22 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 53 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

.