This Article is From Aug 20, 2020

மதுரை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் தாலுகா ஆபீஸ் பந்தலூர் பகுதியில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பதிவானது.

மதுரை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழைக் காலம் நிலவி வருவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம். 

வானிலை அறிவிக்கையில், ‘தமிழகத்தில் தென் மேற்குப் பருவக் காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டிப் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் தாலுகா ஆபீஸ் பந்தலூர் பகுதியில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பதிவானது.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

.