அதி கனமழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

அதேபோல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

அதி கனமழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

அதி கனமழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவகாற்று காரணமாக நீலகிரி, கோவையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய தினம் மட்டும் 111 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 77மிமீ மழைப் பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவு பகுதிகளில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் அதி கன மழையும், கோவை, தேனி, மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும். 

இதேபோல் வருகிற 10ம் தேதி வரை இந்த பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த நான்கு நாட்களுக்கு குமரி கடல் பகுதிகள், வடகிழக்கு அரபிக்கடல் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ‌