This Article is From Feb 27, 2019

தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ கருத்து கூறியுள்ளார்

தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

"மேலும் பதற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது இரு நாடுகளின் பொறுப்பாகும்"

Washington:

நேற்று பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டு போட்டு தகர்த்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அரசு, ‘பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தேயாக வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, ‘இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவுவதனால், எல்லையில் இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். 

மேலும் பதற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது இரு நாடுகளின் பொறுப்பாகும். நான் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியுடன் தொடர்பில்தான் இருக்கிறேன். அவரிடம் பாகிஸ்தான் தரப்பு செய்ய வேண்டியது குறித்தும், தீவிரவாத குழுக்களுக்கு எதிராக அர்த்தபூர்வமான நடவடிக்கை வேண்டும் என்பதையும் கூறியுள்ளேன்' என்றுள்ளார்.

 

மேலும் படிக்க - "பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை!"

.