This Article is From Jan 01, 2019

‘வெடிகுண்டு’ தாக்குதல் பற்றிய தவறான ட்விட் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட அமெரிக்க ராணுவம்!

அமெரிக்க ராணுவம் வெளியிட்ட வீடியோக்களில் பி-2 பாமர் இருப்பது போல காட்சி வெளியானது.

‘வெடிகுண்டு’ தாக்குதல் பற்றிய தவறான ட்விட் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட அமெரிக்க ராணுவம்!

அமெரிக்க ராணுவம் வெளியிட்ட வீடியோக்களில் பி-2 பாமர் இருப்பது போல காட்சி வெளியானது.

Washington:

அமெரிக்காவின் ஸ்டாடேர்ஜிக் கமாண்டு சார்பாக புத்தாண்டை ஓட்டி ட்விட்டரில் ஒரு பகீர் பதிவை வெளியிட்டது. 

அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டின் துவக்கத்தில் ராட்சத பலூனை பறக்க வைப்பது வழக்கம். இதை மையப்படுத்தி ஸ்டாடேர்ஜிக் கமாண்டு வெளியிட்ட டிவிட்டரில் ‘ இந்த ஆண்டு வேண்டுமென்றால் அதைவிட பெரிதாக (வெடி குண்டுகளுடைய விமானத்தை) பறக்க விட‌முடியும் என பதிவு செய்து இருந்தன. 

இந்த பதிவுடன் வெளியான வீடியோக்களில் பி-2 பாமர் இருப்பது போல காட்சியும் வெளியானது.

இதனால் பல தரப்பு மக்கள் கோபமடைந்து தங்களது கருத்துக்களை வெளியிட்ட நிலையில் அந்த பதிவை நீக்கி நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தது.

.