மூத்த அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - அமெரிக்க செனட்டர்!

ராணுவத்தில் உள்ள பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசிய மெக்சாலே, "ஒரு வழக்கில் இப்படி நடப்பதை பெரிதாக்குவதை விட இதை இந்த அமைப்பில் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மூத்த அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - அமெரிக்க செனட்டர்!

பாலியல் துன்புறுத்தல் செய்தவரை மெக்சாலே அடையாளம் காட்டவில்லை

அமெரிக்க செனட்டரான மர்தா மெக்சாலே அமெரிக்க வானூர்தி படையின் முதல் பெண் விமானி. அவரை ஒரு மூத்த அதிகாரி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார். ஆனால் அதனை புகார் அளிக்க போவதில்லை என்றும் தன்னைத்தானே குற்றம் சாட்டியும், இந்த அமைப்பில் உள்ள பிரச்சனை இது என்றும் கூறியுள்ளார்.

ராணுவத்தில் உள்ள பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசிய மெக்சாலே, "ஒரு வழக்கில் இப்படி நடப்பதை பெரிதாக்குவதை விட இதை இந்த அமைப்பில் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

"ஆனால், இந்த அமைப்பு சரியாக இல்லை. நான் என்னையே குற்றம் சாட்டிக் கொள்வேன். நான் குழப்பத்தில் இருக்கிறேன். அவமானமாக உள்ளது. நான் வலிமையாக இருந்தும் அதிகாரம் இல்லாததை போல் உணர்கிறேன்" என்று கூறியுள்ளார். தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தவரை மெக்சாலே அடையாளம் காட்டவில்லை.

"பாலியல் துன்புறுத்தல் குறித்து ராணுவத்தில் யாரும் குற்றம் சாட்ட முன்வருவது இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளிக்கு முனு கப்பல் துறையில் சில நிர்வாண புகைப்படங்கள் வெளியாகின".

தான் பல ஆண்டுகளாக அமைதிகாத்ததாகவும், வேலையில் பாலியல் ரீதியாக அதிகம் துன்புறுத்தப்பட்டதாகவும் அதனால் சிலரை விட்டு விலகியதாகவும் கூறியுள்ளார் மெக்சாலே.

"எல்லோரைப்போலவுமே இந்த அமைப்பால் நானும் வஞ்சிக்கப்பட்டேன்" என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஏர் ஃபோர்ஸ் செய்தி தொடர்பாளர் காரி வோல்ப் "நாங்கள் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். நாங்கள் மெக்சாலேவுடன் துணை நிற்போம்" என்றார்.

இதனை குழு அமைத்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். மெக்சாலே இந்த பிரச்னையை செனட்டர் ஜோனி எர்ன்ஸ்ட் தெரிவித்தபின் இதனை தெரிவித்துள்ளார். 

52 வயதான மெக்சாலே 2 முறை செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். நவம்பரில் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த க்ரிஸ்டர் சினெமாவிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................