ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, 2 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் படி, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக காஷ்மீர் மண்டல காவல்துறை தனது ட்விட்டர் பதிவில், நடந்து வரும் என்கவுண்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து, தேடுதல் பணிகள் நடந்து வருகிறது. மேலும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அளித்த தகவலின் படி, அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, துப்பாக்கிச்சூடு முடிவுக்கு வந்த பின்னர் தொடர்புகள் நிறுவப்பட்டது.
உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவை கூட்டாக ஆபரேஷன் லல்லான் தொடங்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் மட்டும் பதினாறு பயங்கரவாதிகள், கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் போர் நிறுத்தத்தை மீறி, பாரமுல்லாவின் ராம்பூர் துறைக்கும் யூரியின் ஹைபீர் துறைக்கும் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த தேடல் வேட்டை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இத்தனை நாட்களில் நடந்த இரண்டாவது போர்நிறுத்த மீறலாகும்.