This Article is From Sep 28, 2018

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! - சுனாமி அபாயம்?

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! - சுனாமி அபாயம்?

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Jakarta:

இந்தோனேசியாவின் சுலாவேசி பகுதியில் 7.5 ரிக்டர் என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதனைத்தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்த எச்சரிக்கையானது ஒரு மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் மக்கள் விழிப்புடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தேசிய பேரிடர் தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், சுனாமி அபாயம் இல்லையென்றாலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க புவியியல் ஆய்வு அறிக்கையின் படி இன்று இந்தோனேசியாவில், முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவிலும் இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் 7.5 என்ற அளவிலும் பதிவானதாக தெரியவந்துள்ளது.

இதில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், இந்திய பெருங்கடலிலும் சுனாமியை ஏற்படுத்தியது. இதில் 13 நாடுகளைச் சேர்ந்த 2,26,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 1,20,000 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.