This Article is From Aug 02, 2019

இந்தோனேசியாவில் பயங்கர நில நடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு!!

மக்கள் வீடுகளை விட்டு விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளாரர்கள்.

இந்தோனேசியாவில் பயங்கர நில நடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு!!

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

SINGAPORE:

இந்தோனேசிய தீவுகளான சுமத்ரா மற்றும் ஜாவாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 - ஆக பதிவாகியிருக்கிறது. 

இதையொட்டி சுனாமி எச்சரிக்கையை அதிகாரிகள் விடுத்துள்ளனர். ஜாவா தீவில் உள்ள பந்தென் மாகாணத்தின் டெலுக்கு பேடங் நகரில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது  அங்கு 59 கிலோ மீட்டர் ஆழத்தில் அதிர்வுகள் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. 
 

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 

நிலடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் தலைநகர் ஜகார்த்தா வரையிலும் நில நடுக்கம் உணரப்பட்டதாகவும், அங்கேயும் மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.