This Article is From Dec 21, 2018

விவசாய மசோதா: தான் பாடிய வீடியோவை பகிர்ந்த அதிபர் ட்ரம்ப்!

வியாழனன்று ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்டனேயுடன் சேர்ந்து பாடிய பழைய வீடியோ ஒன்றை ட்விட் செய்துள்ளார்.

விவசாய மசோதா: தான் பாடிய வீடியோவை பகிர்ந்த அதிபர் ட்ரம்ப்!

2005 எம்மி விருதுகள் விழாவில் ட்ரம்ப், மேகன் முல்லாலேயுடன் சேர்ந்து பாடிய க்ரீன் ஏக்கர்ஸ் பாடலை ட்விட் செய்திருந்தார். 

இந்த வருடம் முடியும் நிலையில் ட்ரம்ப்பின் ஒரு செயல் மீண்டும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. வியாழனன்று ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்டனேயுடன் சேர்ந்து பாடிய பழைய வீடியோ ஒன்றை ட்விட் செய்துள்ளார். அது அதிபர் பதவியிலிருக்கும் ஒருவரின் தரம் தாழ்ந்த பதிவாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

அந்த ட்விட்டில் ''விவசாய மசோதா இன்னும் 15 நிமிடத்தில் அனுமதிக்கப்படும்'' என்று எழுதியிருந்தார். அதில் இணைக்கப்பட்டிருந்த வீடியோவில், 2005 எம்மி விருதுகள் விழாவில் ட்ரம்ப், மேகன் முல்லாலேயுடன் சேர்ந்து பாடிய க்ரீன் ஏக்கர்ஸ் பாடலை ட்விட் செய்திருந்தார். 

இந்த ட்விட்டின் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப், "மாகாணசபை கொண்டு வரும் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம்" என்பதை குறிப்பிடும் வகையில் இந்த ட்விட் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கும் விவசாய மசோதாவுக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால், இந்த வீடியோவில் ட்ரம்ப், விவசாயிகள் அணியும் உடையை அணிந்துள்ளார். கையில் விவசாய கருவிகளை வைத்துள்ளார். இவையெல்லாம் வைத்து பார்த்தால் இது விவசாய சட்டத்துக்கு பதிலளிக்கும் விஷயமாக கூறப்படுகிறது.

2005ம் ஆண்டு டிவி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப், எட்டி அல்மெர்ட்டின் ''க்ரீன் ஏக்கர்'' கதாபாத்திரத்தையும், முல்லாலே அவரது மனைவி கதாபாத்திரத்தையும் ஏற்று பாடினர். இதில் முல்லாலே 'டைம்ஸ் ஸ்கொயர்' என்ற வார்த்தையை மாற்றி 'ட்ரம்ப் டவர், என்று பாடினார். 

இந்த ட்விட்டுக்கு முல்லாலே ''ஓ மைக் காட்'' என்று பதில் ட்விட் செய்துள்ளார். இது அவரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுதான் அனைவரது ரியாக்ஷனுமாக இருந்தது என்று அமெரிக்க தகவல்கள் கூறுகின்றன.

"ட்ரம்ப், மரியாதை குறைவாகவும், விளையாட்டுத்தனமாகவும் ட்விட் செய்கிறார் என்றாலும், இது கேலியான விஷயமில்லை. ஒரு செலிப்ரிட்டியாக தன்னை வைத்திருக்க ட்ரம்ப் செய்யும் வேலைகள் தான் இவை" என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

எம்மி, ட்ரம்புக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. எப்போதெல்லாம் ட்ரம்புக்கு இங்கு நடக்கும் விஷயங்கள் சரியானதாக அமையவில்லையென்றாலும், அவர் மீது விமர்சனங்கள் வைப்பவர்கள் மீது பழி சுமத்தி விடுகிறார்" என்று ஹிலாரி க்ளின்டன் ட்ரம்ப்பை சாடியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.