This Article is From Jul 16, 2018

ட்ரம்ப் - புதின் பேச்சுவார்த்தை ; நடக்கப்போவது என்ன?

இரு தலைவர்களுக்குமான இந்த சந்திப்பு, உலக அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

ட்ரம்ப் - புதின் பேச்சுவார்த்தை ; நடக்கப்போவது என்ன?
HELSINKI:

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- ரஷ்ய அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை பின்லாந்து ஹெல்சின்கி நகரில் இன்று நடைப்பெற்றது.

செய்தியாளர்கள் முன்னிலையில், இரு தலைவர்களும் சந்தித்து கொண்டனர். முதலில், உலக கோப்பை கால்பந்து போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதற்கு புதினுக்கு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார். 

வர்த்தகம் முதல் இராணுவம் வரை அனைத்து விவரங்களையும் இந்த சந்திப்பில் பேச இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

“அமெரிக்கா- ரஷ்யா இடையே சிறப்பான உறவு கட்டமைக்கப்படும் என நம்புகிறேன். உலகின் இரண்டு பெரிய அணுசக்தி நாடுகள் நட்பு வைத்து கொள்வதை மக்கள் விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். உலக அளவில் 90% அணுசக்தி கட்டுப்பாட்டு எங்களிடம் உள்ளது என்பது சரியானது அல்ல” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

“உலக பிரச்சனைகள் குறித்தும், இரு நாடுகளுக்குமிடையேயான உறவு குறித்தும் நிலையான பேச்சுவார்த்தை நடைப்பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது.” என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.

இரு தலைவர்களுக்குமான இந்த சந்திப்பு, உலக அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

.