This Article is From Oct 18, 2018

ஹெச்-1பி விசாவில் பெரும் மாற்றம் கொண்டு வரப் போகும் அமெரிக்கா..!

அமெரிக்கா அரசு, ஹெச்-1பி விசா விதிமுறைகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வரப் போவதாக தெரிவித்துள்ளது

ஹெச்-1பி விசாவில் பெரும் மாற்றம் கொண்டு வரப் போகும் அமெரிக்கா..!

இது குறித்து அமெரிக்காவின் ஹோம்லாண்டு செக்யூரிட்டி துறை தகவல் தெரிவித்துள்ளது

Washington:

அமெரிக்கா அரசு, ஹெச்-1பி விசா விதிமுறைகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வரப் போவதாக தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இந்திய ஐடி நிறுவனங்களில் பெரும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அமெரிக்காவின் ஹோம்லாண்டு செக்யூரிட்டி துறை, ‘வரும் ஜனவரி 2019-க்கு முன்னர் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றம் குறித்து புதிய விதிமுறைகள் வகுக்கப்படும். அப்படி புதிதாக வகுக்கப்படும் விதிமுறைகளில் ‘ஸ்பெஷாலிட்டி ஆக்குபேஷன்’ குறித்து தெளிவுபடுத்தப்படும். அதன் மூலம் ஹெச்-1பி விசாவை மிகவும் தகுதி வாய்ந்த, நாட்டுக்கு மிகவும் தேவையான வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்படும்.

மேலும் அமெரிக்க ஊழியர்களையும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தையும் பாதுகாக்கும் வகையில் விதிமுறைகள் திருத்தப்படும். அதேபோல, ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கும் முறையான ஊதியம் கொடுக்கப்படுவது உறுதி செய்யப்படும். இதுமட்டுமல்லாமல், ஹெச்-4 விசாவை நீக்குவது குறித்தும் முடிவெடுக்கப்படும்.’ என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே, வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்படும் குடியுரிமை குறித்தும் குடியேற்றம் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், ஹெச்-1பி விசா குறித்து அமெரிக்க அரசு எடுக்கும் முடிவு அமெரிக்க வாழ் ஐடி ஊழியர்களையும் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐடி நிறுவனங்களையும் பெருமளவு பாதிக்கும் என்று தான் யூகிக்கப்படுகிறது.

.