This Article is From Jul 30, 2019

மாநிலங்களவையிலும் நிறைவேறியது முத்தலாக் மசோதா!!

மசோதாவுக்கு பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

மோடி அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக மசோதா நிறைவேற்றம் பார்க்கப்படுகிறது.

New Delhi:

மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய முத்தலாக மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இது மோடி அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. 

இந்த மசோதாவுக்கு பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

ஓட்டெடுப்பின்போது அதிமுக, ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். பெரும்பான்மை அரசுக்கு கிடைத்ததை தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. 

முஸ்லிம் கணவன் அவரது மனைவியை மூன்று முறை தலாக் என்று கூறி உடனடியாக விவகாரத்து செய்வதற்கு தடை விதிக்கும் வகையில், முந்தைய மோடி ஆட்சிக் காலத்தின்போது மசோதா கொண்டு வரப்பட்டது. இதனால் முஸ்லிம் ஆண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

இதன்பின்னர் புகாருக்கு ஆளான கணவர்களுக்கு ஜாமீன் அளிக்கலாம் என்பது உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடையாது என்பதால், மசோதா நிலுவையில் இருந்தது. பின்னர் தேர்தலையொட்டி மக்களவை கலைக்கப்பட்டதால் மசோ காலாவதி ஆனது.

இந்நிலையில் மோடி அரசு மீண்டும் பொறுப்பு ஏற்று முதல் கூட்டத்தொடர் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் மீண்டும் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கலாகி நிறைவேற்றப்பட்டுள்ளது.

.