This Article is From Oct 22, 2018

அமிர்தசரஸ் கோர ரயில் விபத்து: ஓட்டுநர் பொய் கூறுவதாக சாட்சிகள் புகார்!

ரயிலை நிறுத்துவதற்கு ஓட்டுநர் முயற்சி செய்யவில்லை என சாட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும், கூட்டத்தினர் ரயில் மீது கல் வீசியதாக ரயில் ஓட்டுநர் கூறிய குற்றச்சாட்டையும் மறுத்துள்ளனர்

அமிர்தசரஸ் கோர ரயில் விபத்து: ஓட்டுநர் பொய் கூறுவதாக சாட்சிகள் புகார்!

கோர ரயில் விபத்தை தொடர்ந்து, ஞாயிறன்று காலை போராட்டகாரர்கள் போலீஸூடன் மோதலில் ஈடுபட்டனர்.

ஹைலைட்ஸ்

  • கூட்டத்தை பார்த்த உடன் பிரேக் போட்டதாக ரயில் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
  • ஆனால், உள்ளூர் வாசிகள் ரயில் கண் இமைக்கும் நேரத்தில் கடந்து சென்றதாக தெரி
  • ஓட்டுநரின் கூற்றை சம்பவத்தை நேரில் பார்த்த போலீசார் மறுத்துள்ளார்.
Amritsar:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ரயில் பாதையில் நின்று தசரா கொண்டாட்டங்களை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் இதுவரை 61 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்டத்தினர் ரயிலின் மீது கல் வீசியதாலே ரயிலை நிறுத்தவில்லை என ஓட்டுநரின் கூற்றை உள்ளூர் வாசிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

கடந்த அக்.19ஆம் தேதி இரவு நடந்த கோர ரயில் விபத்து குறித்து கவுன்சிலர் சைலேந்தர் சிங் ஷாலி விவரிக்கையில், ரயிலை நிறுத்தியிருக்காலம், ஆனால், ரயிலின் வேகம் கூட குறையவில்லை. இது ஓட்டுநர் எங்கள் மீது ஏற்றிச்செல்ல வேண்டும் நினைத்ததாகவே தெரிகிறது. கண் இமைக்கும் நேரத்தில் ரயில் வேகமாக எங்களை கடந்து சென்றது. எங்கள் முன் அவ்வளவு மக்கள் காயமடைந்து, உயிரிழந்து கிடக்கும், ஒரு சூழ்நிலையில் எங்களால் எப்படி கல் வீச முடியும்? என அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த அந்த ரயில்வே பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். எதிர்கட்சியனர் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அலட்சியமே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என அதன் தலைவர்களை குற்றம்சாட்டி வருகின்றன.

ரயில் ஓட்டுநர் தனது வாக்குமூலத்தில், பெரும் மக்கள் கூட்டத்தை பார்த்தவுடன் அவசர பிரேக்குகள் போடப்பட்டதாகவும், இருப்பினும் ரயிலை நிறுத்த முடியவில்லை என்றும், தண்டவாளத்திலிருந்து கூட்டத்தை கலைக்க பலமுறை ஹாரன் சத்தம் எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில் நிற்கும் நேரத்தில் அங்கு இருந்த மக்கள் ரயில் மீது கல் வீச தொடங்கினர். இதனால், பயணிகளின் பாதுகாப்பு கருதி அமிர்தசரஸ் சென்று ரயிலை நிறுத்தி அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து தெரிவித்தேன் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

பரமஜீத் சிங் என்ற மற்றொரு சாட்சியும், ஓட்டுநரின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். நூற்றுக்கணக்கான வீடியோக்கள் ரயில் எவ்வளவு வேகத்தில் வந்தது என்பதை காட்டுகிறது. எதிர்வினையாற்ற எங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எங்களுக்கு கேட்டது எல்லாமே மக்களின் அலறல் மற்றும் அழுகை சத்தம் மட்டுமே என தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த போலீஸ் ஒருவர் அளித்த சாட்சியில், அவர் ரயில் ஓட்டுநரின் வாக்குமூலத்தை முற்றிலும் மறுத்துள்ளார். ரயில் ஓட்டுநர் கூறிய எதுவும் உண்மையில்லை என்றார். மேலும், எனக்கு தெரிந்து சம்பவ இடத்தில் எந்த கல்வீச்சு சம்பவமும் நடக்கவில்லை. மேலும் ரயிலின் வேகமும் குறையவில்லை என மோகம்பூரா காவல்நிலைய அதிகாரி சுக்மிந்தர் சங் தெரிவித்துள்ளார்.

.