This Article is From Jun 13, 2018

ஓடும் பேருந்தில் 18 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட பயங்கரம்

புகார் அளித்ததற்காக பழிவாங்கும் நோக்கில், இந்த கொலை நடைப்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்

ஓடும் பேருந்தில் 18 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட பயங்கரம்

The accused had allegedly circulated obscene photos of the victim's sister. (Representational)

ஹைலைட்ஸ்

  • பெண்ணுக்கு தொந்தரவு தந்தால் கொலையாளி மீது புகார்
  • புகார் அளித்த பகையால் இளைஞர் கொலை
  • ஓடும் பேருந்தில் 18 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட பயங்கரம்
Pune: பூனே: பூனேவில் ஓடும் பேருந்தில் 18 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி, பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் தங்கைக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததும், அது தொடர்பாக அவர் மீது காவல் துறையில் பாதிக்கப்பட்ட இளைஞர் புகார் அளித்தும் உள்ளார். இந்த பகையை மனதில் வைத்துக் கொண்டே இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்ய வந்த நபர், கூர்மையான கத்தியால் இளைஞனை தாக்கினார். கொலை சம்பவத்தை பார்த்த பொது மக்கள், அதிர்ச்சியில் கூச்சலிட்டதால், ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார், அப்போது கொலையாளி தப்பி ஓடியதாக தகவல்கள் கூறுகின்றன. பின்னர் காவல் துறையினர் கொலையாளியை தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

பூனவில் உள்ள தாவாடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட நபரின் தங்கையின் புகைப்படங்களை குற்றவாளி சமூக வலைத்தளங்களில் பரப்பியதும் தெரியவந்துள்ளது என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"பெண்ணின் புகைப்படங்களையும், தகவல்களையும் சமூக வலைத்தளத்தில் பரப்பியதற்காக, சந்தேகத்தின் அடிப்படையில், உறவுக்காரரின் மீது அந்த பெண்ணின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்." என்று அதிகாரி தெரிவித்தார்.

புகார் அளித்ததற்காக பழிவாங்கும் நோக்கில், இந்த கொலை நடைப்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
.