This Article is From Nov 13, 2019

TNPSC Combined Engineering Services : பொறியாளர்கள் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு!!

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in - ல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

TNPSC Combined Engineering Services : பொறியாளர்கள் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு!!

குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

New Delhi:

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் TNPSC நடத்திய Combined Engineering Services பொறியாளர்கள் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதனை  www.tnpsc.gov.in - என்ற இணைய தள முகவரிக்கு சென்று, தங்களது பதிவெண்ணை குறிப்பிட்டு தேர்வு எழுதியவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

எழுத்துத் தேர்வில் வெற்றி  பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. கேட்டுக் கொண்டுள்ளது. 

பொறியாளர் எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 25 ஆகிய 2 தினங்களில் நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, நவம்பர் 20 முதல் 29-ம்தேதி வரைக்குள் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

இதற்காக TACTV நடத்தும் இ - சேவை மையங்களை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளன. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின் அஞ்சல் மூலமாக விவரங்கள் தெரிவிக்கப்படும். அவர்கள் மட்டுமே சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

டி.என்.பி.எஸ்.சி. கேட்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்யத் தவறினால் அந்த தேர்வர், அடுத்த கட்டத்திற்கு செல்ல மாட்டார் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. 

எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்துத்  தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். அவர்கள் Assistent Engineer, Junior Architect பணிகளுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். 
 

.