ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகை: முதல்வர் அறிவிப்பு

தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா ஆகிய மூவர்தான் இந்தப் பரிசுத் தொகையைப் பெறுகின்றனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகை: முதல்வர் அறிவிப்பு

2018 ஆசிய போட்டிகள், இந்தோனேசியாவில் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடித்தது. இதையடுத்து, தமிழகத்திலிருந்து இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆசிய போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள், ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். அவர்களுக்கு 30 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா ஆகிய மூவர்தான் இந்தப் பரிசுத் தொகையைப் பெறுகின்றனர்.

அதேபோல இந்திய அணி, இம்முறை ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த 2 தமிழக வீரர்களுக்கு 20 லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், ‘பெண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................